கரூர் மருத்துவமனையில்..  கோப்புப்படம்.
தமிழ்நாடு

கரூர் பலி: செந்தில் பாலாஜிக்கு தொடர்பு! மக்கள் மீது தடியடி!! தவெக மனு

கரூர் பலி விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தவெக மனு தாக்கல் செய்தது.

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் சனிக்கிழமை இரவு பிரசாரம் செய்தபோது கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 40 பேர் பலியான சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தவெக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கரூா் துயர சம்பவத்துக்கு சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி, தவெக சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி தண்டபாணியிடம் ஞாயிற்றுக்கிழமை முறையீடு செய்யப்பட்டது.

சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள உயா்நீதிமன்ற நீதிபதி தண்டபாணியின் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை தவெக தரப்பு வழக்குரைஞா் அறிவழகன் தலைமையிலான அக்கட்சியினா் சென்று இந்த முறையீட்டை தாக்கல் செய்தனா். இந்த முறையீடு, உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் திங்கள்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு விசாரிக்கப்படவுள்ளதாக தவெக இணைப் பொதுச் செயலா் சி.டி.நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைப் பாதுகாக்க வேண்டும். திட்டமிட்டு மின்சாரம் நிறுத்தப்பட்டது. காவல் துறையினா் தொண்டா்கள் மீது அத்துமீறி தடியடி நடத்தினா். இந்த சம்பவம் திட்டமிட்ட சதி என்று தவெக சார்பில் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், திங்கள்கிழமை முறைப்படி மனுவாகத் தாக்கல் செய்யுமாறு நீதிபதி கூறியதைத் தொடர்ந்து, ஆதவ் அர்ஜூனா சார்பில் இன்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கூட்ட நெரிசல் சம்பவத்தில் திமுகவைச் சேர்ந்த உள்ளூர் அரசியல்வாதிக்கு தொடர்பிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க மருத்துவமனையில் என்னை அனுமதிக்க மறுத்துவிட்டார்கள். சனிக்கிழமை கரூரில், செந்தில் பாலாஜி பற்றி விஜய் பேசிய போதுதான், கற்கள், செருப்புகள் வீசப்பட்டு மின்சாரம் பாதிக்கப்பட்டது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடைபெறுவதற்கு முன்பே மருத்துவமனைகள் தயார் நிலையில் இருந்தன. கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியிருக்கிறார்கள். சம்பவத்துக்கு காரணமாக செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார் ஆதவ் அர்ஜுனா.

A petition has been filed on behalf of the Tamil Nadu Victory Party (TVP) seeking a CBI inquiry into the incident in which 40 people were killed in a stampede that occurred during a campaign by Tamil Nadu Victory Party (TNVP) leader Vijay in Karur on Saturday night.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தா... காஜல் அகர்வால்!

கரூர் பலி: அவதூறு, வதந்தி பரப்ப வேண்டாம் -முதல்வர் ஸ்டாலின்

பிகாரில் 3 அம்ரித் பாரத், 4 பயணிகள் ரயில் சேவை தொடக்கம்: அஸ்வினி வைஷ்ணவ்

உயிர்சேதம் ஏற்படும் என ஆனந்தை எச்சரித்தோம்! எப்ஐஆரில் அதிர்ச்சித் தகவல்கள்!

பிக் பாஸ் - 9 நிகழ்ச்சிக்கு செல்லும் பொன்னி தொடர் நாயகன்!

SCROLL FOR NEXT