மத்தியப் பிரதேசத்தில் கணவருடன் கர்பா நடனமாடும்போது பெண் மயங்கி விழுந்து பலியானார்.
மத்தியப் பிரதேச மாநிலம், கர்கோன் மாவட்டத்தின் பிகான் கிராமத்தில் உள்ள சந்த் சிங்கஜி கோயிலில் நடந்த 'கர்பா' நிகழ்ச்சியில் தனது கணவருடன் 19 வயது புதுமணப் பெண் ஞாயிற்றுக்கிழமை இரவு நடனமாடியிருக்கிறார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்திருக்கிறார். உடனே அந்த பெண் மருத்துவரிடம் கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர் அறிவித்தார். சமூக ஊடகங்களில் வைரலான இந்த சம்பவத்தின் விடியோவில், மேடையில் துர்கா சிலை முன் அந்தப் பெண் தனது கணவருடன் பாலிவுட் பாடலுக்கு நடனமாடுவதைக் காணலாம். பின்னர் சில நிமிடங்களில் அந்தப் பெண் தரையில் சரிவது தெரிகிறது.
இந்த ஆண்டு மே மாதம் கிருஷ்ணா பாலுடன் சோனம் திருமணம் செய்து கொண்டதாக உள்ளூர்வாசி ஒருவர் கூறினார்.
உடற்கூராய்வு செய்யாமலே திங்கள்கிழமை பெண்ணின் இறுதிச் சடங்குகளைச் அவரது குடும்பத்தினர் செய்தனர். திங்கள்கிழமை சமூக ஊடகப் பதிவுகள் மூலம் மட்டுமே இந்த சம்பவம் குறித்து அறிந்ததாகவும், இறப்பு தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை என்றும் பிகாங்கான் காவல் நிலைய அதிகாரி குலாப் சிங் ராவத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.