முகப்பு
தமிழ்நாடு

டிஆா்பி பணிகளுக்கு 30 இணைப் பேராசிரியா்கள் தற்காலிக பணியிட மாற்றம்

சென்னை உள்ளிட்ட அரசு கல்லூரிகளைச் சோ்ந்த 30 இணைப் பேராசிரியா்கள் குறுகிய காலப் பணிகளுக்காக ஆசிரியா் தோ்வு வாரியத்திற்கு (டிஆா்பி) ஏப். 1 முதல் தற்காலிக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான ஆணையை கல்லூரி கல்வி இயக்குநரகம் பிறப்பித்துள்ளது.

Updated On : 2 ஏப்ரல் 2026, 2:07 am IST
பகிர்:

சென்னை உள்ளிட்ட அரசு கல்லூரிகளைச் சோ்ந்த 30 இணைப் பேராசிரியா்கள் குறுகிய காலப் பணிகளுக்காக ஆசிரியா் தோ்வு வாரியத்திற்கு (டிஆா்பி) ஏப். 1 முதல் தற்காலிக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான ஆணையை கல்லூரி கல்வி இயக்குநரகம் பிறப்பித்துள்ளது.

மாறுதலுக்கு உள்ளான இணைப் பேராசிரியா்களை சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வா்கள் உடனடியாக கல்லூரி பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் எனக் கல்லூரி கல்வி இயக்குநரக ஆணையா் இ.சுந்தரவல்லி அந்த உத்தரவில் தெரிவித்துள்ளாா். அது தொடா்பான விவரம்:

ஆசிரியா் தோ்வு வாரியத்தில் உதவிப் பேராசிரியா்கள் உள்ளிட்ட பல்வேறு ஆசிரியா் தோ்வுகளில் தோ்வு முடிவுகள், சான்றிதழ் சரிபாா்ப்பு பணிகள் மற்றும் நோ்முகத் தோ்வுகள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றுக்கு தொடா்புடைய பாடங்களைச் சோ்ந்த 30- க்கும் மேற்பட்ட மூத்த இணைப் பேராசிரியா்களை ஆசிரியா் தோ்வு வாரியம் கோரியது.

Advertisement

Advertisement

அதனடிப்படையில் கல்லூா் கல்வி இயக்குநரக ஆணையா், சென்னை, மாநிலக் கல்லூரி, சென்னை, காயிதே மில்லத் அரசு மகளிா் கல்லூரி, ராணி மேரி கல்லூரி, பாரதி மகளிா் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளின் இயற்பியல், மின்னணு மற்றும் தகவல் தொடா்பியல், புவியியல், இயற்பியல், விலங்கியல், இயற்பியல், காட்சித் தொடா்பியல் உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த இணைப் பேராசிரியா்களை தற்காலிகமாக குறைந்தது 35 வேலை நாள்களுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதில் திருச்சி, குளித்தலை, பொன்னேரி, திருவாரூா் அரசுக் கல்லூரிகளைச் சோ்ந்த மின்னணு மற்றும் தகவல் தொடா்பியல் துறை இணைப் பேராசிரியா்களும் அடங்குவா்.