முகப்பு
தமிழ்நாடு

விஜய்க்கு 2-ஆவது இடம்! - ‘லோக் போல்’ கருத்துக்கணிப்பு முடிவுகள்

முதல்வராக யார் வர வேண்டும்? மு. க. ஸ்டாலின் முதல்வராவார்! விஜய்க்கு 2-ஆவது இடம் - ‘லோக் போல்’ கருத்துக்கணிப்பு முடிவுகள்

Updated On : 1 ஏப்ரல், 2026 at 12:44 PM
விஜய் - ANI
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முந்தைய ‘லோக் போல்’ கருத்துக்கணிப்பில், முதல்வராக யார் வர வேண்டும்? எந்த வேட்பாளருக்கு முதல்வராக ஆதரவு தெரிவிப்பீர்கள்? என்று வாக்காளர்களிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக விஜய்க்கு 2-ஆவது அதிகபட்ச ஆதரவு அலை வீசுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. அனைத்து கட்சிகளும் பிரசாரத்தில் படுதீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், முக்கிய கட்டத்தில் தேர்தலுக்கு முந்தைய ‘லோக் போல்’ கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று (ஏப். 1) வெளியிடப்பட்டன.

தமிழக வாக்காளர்களிடையே நடத்தப்பட்ட லோக் போல் கருத்துக்கணிப்பில், மு. க. ஸ்டாலின் 41 சதவீத ஆதரவைப் பெற்று முதலிடமும், விஜய் 27.1 சதவீத ஆதரவுடன் இரண்டாமிடமும், எடப்பாடி கே. பழனிசாமி 24.1 சதவீத ஆதரவுடன் மூன்றாமிடமும், பிற வேட்பாளர்களுக்கு 9.8 சதவீதம் ஆதரவாக வாக்காளர்கள் கருத்து தெரிவித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

TN Election 2026: the most preferred CM face in Tamilnadu - Lok Poll survey

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.