முகப்பு
தமிழ்நாடு

தேர்தல்: புதுவையில் கல்லூரிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை!

புதுவையில் கல்லூரிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது பற்றி...

Updated On : 7 ஏப்ரல், 2026 at 7:42 AM
கோப்புப் படம்
பகிர்:

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி புதுவையில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

புதுவையில் நாளை மறுநாள்(ஏப். 9, வியாழக்கிழமை) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி புதுவையில் தேர்தல் பிரசாரம் இன்றுடை நிறைவு பெறுகிறது.

இந்நிலையில் தேர்தலையொட்டி புதுவையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஏப். 6 முதல் 10 ஆம் தேதி வரை ஏற்கெனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில் புதுவையில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கும் நாளை(ஏப். 8) முதல் ஏப். 10 ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகள் பலவும் வாக்குச்சாவடிகளாக இருப்பதால் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல கேரளம், அஸ்ஸாம் மாநிலத்திற்கும் ஏப். 9 தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Assembly Election: 3-Day Holiday for Colleges in Puducherry

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments