கேரளம்: பக்ரீத் பண்டிகைக்கு 2 நாள்கள் விடுமுறை!
கேரளத்தில் பக்ரீத் பண்டிகைக்கு 2 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது குறித்து...
கேரளத்தில் பக்ரீத் பண்டிகைக்கு 2 நாள்கள் விடுமுறை வழங்கப்படுவதாக அந்த மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.
மாநிலத்தில் மே 28 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனைத் தொடர்ந்து, வரும் மே 28 ஆம் தேதியுடன் சேர்த்து, மே 27 ஆம் தேதியையும் பக்ரீத் பண்டிகைக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தொழிற்கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
கடந்த ஆண்டு, முதலில் ஜூன் 6 ஆம் தேதி பக்ரீத் பண்டிகைக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், 2025 ஜூன் 7 ஆம் தேதியே மாநிலம் முழுவதும் இப்பண்டிகை கொண்டாடப்படும் என்ற செய்திகளைத் தொடர்ந்து, கேரள அரசு பொது விடுமுறை தேதியை ஜூன் 7 ஆம் தேதிக்கு மாற்றியதால் அப்போதைய மாநில அரசு பல விமர்சனங்களை எதிர்கொண்டது.
அதனைத் தொடர்ந்து, 2025 ஜூன் 6 ஆம் தேதியையும் அரசு விடுமுறை நாளாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
The Kerala government announced on Sunday that a two-day holiday will be granted for the Bakrid festival in the state.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.