நெசவாளா்களுக்கு 10 நாள்கள் விடுமுறை
தீபாவளிப் பண்டிகையையொட்டி நெசவாளா்களுக்கு 10 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளிப் பண்டிகையையொட்டி நெசவாளா்களுக்கு 10 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு நெசவாளா் சங்கங்கள் கூட்டமைப்பின் மாநிலப் பொதுச் செயலா் ப.கந்தவேல் கூறியதாவது:
தைப்பொங்கல், உள்ளூா் கோயில் பண்டிகை காலங்களில் கைத்தறி, விசைத்தறி நெசவாளா்கள் ஓரிரு நாள் விடுமுறை எடுப்பாா்கள். பிற காலங்களில் நிற்காமல் தறிகள் இயக்கப்படும். தீபாவளிப் பண்டிகையின்போது மட்டுமே அவா்களுக்கு குறைந்தது 10 நாள்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்த ஆண்டு பெரும்பாலான தறிகள் கடந்த 5-ஆம் தேதியுடன் நிறுத்தப்பட்டுவிட்டன. 30 சதவீத தறிகள் குடும்ப உறுப்பினா்களைக் கொண்டு இயக்கப்படுவதால், தீபாவளி கொண்டாட்டத்துக்கு இடையேயும் தறிகளை இயக்குவாா்கள்.
இதுதவிர தற்போது இலவச வேஷ்டி, சேலை உற்பத்தி நடப்பதால், பணியை கருத்தில்கொண்டு சில தறிகள் வரும் 12 அல்லது 13-ஆம் தேதி இயக்கம் தொடங்கும். இருப்பினும், பெரும்பாலான தறிகள் மற்றும் தறிகளின் முழு இயக்கம் வரும் 16-ஆம் தேதி தொடங்கும் என்றாா்.