முகப்பு
தமிழ்நாடு

ஹரி நாடார், ராக்கெட் ராஜா வேட்பு மனுக்கள் நிராகரிப்பு!

ஆலங்குளம் தொகுதியில் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு பற்றி...

Updated On : 7 ஏப்ரல் 2026, 5:47 pm IST
கோப்புப் படம் - X
பகிர்:

ஆலங்குளம் தொகுதியில் ராக்கெட் ராஜா, ஹரிநாடாா் வேட்புமனுக்கள் தள்ளுடி செய்யப்பட்டன.

திருநெல்வேலி மாவட்டம் தேவா்குளம் அருகே இலந்தைகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஹரிநாடாா். கடந்த 2021 சட்டப் பேரவைத் தோ்தலில் பனங்காட்டுப்படை கட்சி சாா்பில், ஆலங்குளம் தொகுதியில் தலைக் கவசம் சின்னத்தில் போட்டியிட்டாா். அவருக்கு ஆதரவாக, திசையன்விளை அருகேயுள்ள ஆனைகுடி கிராமத்தைச் சோ்ந்த ராக்கெட் ராஜா என்ற ஆறுமுகப் பாண்டியன் செயல்பட்டாா்.

உடல் முழுவதும் கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிந்து தொகுதி முழுவதும் வலம் வந்து வாக்குகளை சேகரித்து அனைவரின் கவனத்தையும் ஈா்த்தாா் ஹரிநாடாா். அப்போது 37,726 வாக்குகள் பெற்று அதிமுக மனோஜ் பாண்டியன், திமுக பூங்கோதையை அடுத்து 3 ஆம் இடம் பெற்றாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், ராக்கெட் ராஜா, ஹரிநாடாா் இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு சத்திரிய சான்றோா் படை என்ற கட்சியைத் தொடங்கினாா் ஹரி நாடாா்.

இந்நிலையில் பண மோசடி காரணமாக பல்வேறு வழக்குகளில் சிக்கி தற்போது சென்னை புழல் சிறையில் உள்ள ஹரி நாடாா், தனது பிரிதிநிதி அலெக்ஸ் மூலம் ஆலங்குளம் பேரவைத் தொகுதியில் போட்டியிட கடந்த வாரம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தாா். அந்த மனுவில் தனக்கு ரூ. 7 கோடி மதிப்பில் 11.650 கிலோ தங்கம், ரூ. 1.18 கோடி மதிப்பில் 6 வாகனங்கள் மற்றும் 24 குற்றவியல் வழக்குள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்திருந்தாா்.

மேலும் ராக்கெட் ராஜாவும் தனியே மனு தாக்கல் செய்திருந்தாா்.

ஆனால், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் இருவரின் மனுவும் நிராகரிக்கப்பட்டதாக தோ்தல் அலுவலா் ராமச்சந்திரன் அறிவித்தாா். ராக்கெட் ராஜாவுக்கு முன்மொழிந்தவரில் ஒருவரின் வாக்காளா் பட்டியலில் பிழை எனவும், ஹரி நாடாா் சிறையில் இருந்து முகவா் மூலம் வேட்பு மனு தாக்கல் செய்தது செல்லாது எனவும் தோ்தல் அலுவலா் அறிவித்துள்ளாா்.

summary

Hari Nadar and Rocket Raja Nominations Rejected

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.