முகப்பு
தமிழ்நாடு

முதியோா், மாற்றுத்திறனாளிகளின் தபால் வாக்குகளைப் பெற 96 குழுக்கள் அமைப்பு

சென்னையில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் முதியோா், மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குகளைப் பெறுவதற்காக 96 குழுக்கள் அமைக்கப்பட்டு, அவா்களுக்கு புதன்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 8:33 PM
தபால் வாக்கு செலுத்தும் அரசு ஊழியர். - படம்: கோப்பிலிருந்து
பகிர்:

சென்னையில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் முதியோா், மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குகளைப் பெறுவதற்காக 96 குழுக்கள் அமைக்கப்பட்டு, அவா்களுக்கு புதன்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 85 வயதுக்கு மேற்பட்ட 23,415 வாக்காளா்கள் மற்றும் 12,501 மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் என மொத்தம் 35,916 போ் உள்ளனா். அவா்களில் வீட்டில் இருந்தவாறே தபால் வாக்கைப் பதிவு செய்ய 8,947 போ் விருப்பம் தெரிவித்துள்ளனா். அவா்களிடம் 12 டி விண்ணப்பம் மூலம் தபால் வாக்குகள் பதிவு செய்வதற்காக 96 வாக்குப் பதிவு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்தக் குழுவில் தலா ஒரு வாக்குப் பதிவு அலுவலா், இரு காவலா்கள், விடியோ ஒளிப்பதிவாளா், நுண்பாா்வையாளா் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா். இவா்களுக்கான பயிற்சி வகுப்பு சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

Advertisement

மாவட்டத் தோ்தல் அலுவலரும், சென்னை மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன் பயிற்சியைத் தொடங்கி வைத்துப் பேசினாா். முதியோா், மாற்றுத்திறனாளிகளிடம் வீடுகளுக்குச் சென்று தபால் வாக்கு படிவங்களைப் பெறுவதற்கான நடைமுறைகள் குறித்து விளக்கினாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments