முகப்பு
தமிழ்நாடு

திமுக கூட்டணியின் மோசமான நிர்வாகத்தால் ஒவ்வொரு துறையிலும் பாதிப்பு: பியூஷ் கோயல்

திமுக கூட்டணியின் மோசமான நிர்வாகத்தில் ஒவ்வொரு துறையும் பாதிக்கப்பட்டிருப்பதாக பாஜக தலைவர் பியூஷ் கோயல் குற்றச்சாட்டு

Updated On : 18 ஏப்ரல் 2026, 6:11 pm IST
உதகை செய்தியாளர்கள் சந்திப்பில் பியூஷ் கோயல் - விடியோ க்ளிப்
பகிர்:

திமுக கூட்டணியின் மோசமான நிர்வாகத்தில் ஒவ்வொரு துறையும் பாதிக்கப்பட்டிருப்பதாக பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் குற்றம் சாட்டியுள்ளார்.

உதகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சரும் பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் பேசியதாவது, "தமிழ்நாட்டுக்கு மாற்றம்தான் வேண்டும். தமிழக மக்களுக்கு வாக்குறுதிகள் தேவையில்லை, அவர்களுக்கு செயல்படுத்தும் திறனும் நடவடிக்கைகளும்தான் தேவை.

திமுக கூட்டணியைத் தோற்கடிக்க தமிழக மக்கள் முடிவெடுத்து விட்டனர்.

Advertisement

Advertisement

மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவர மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவோருக்குத்தான் மக்கள் வாக்களிப்பர்.

திமுக - காங்கிரஸ் கூட்டணியின் மோசமான நிர்வாகத்தால் ஒவ்வொரு துறையும் பாதிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

summary

Every sector is suffering because of this DMK Congress unholy alliance and bad governance, says Union Minister Piyush Goyal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.