என்டிஏ கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும்: பியூஷ் கோயல் உறுதி
தேர்தலில் என்டிஏ கூட்டணி கண்டிப்பாக ஆட்சியமைக்கும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி
தேர்தலில் என்டிஏ கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களுடன் மத்திய அமைச்சரும் தமிழக பாஜக பொறுப்பாளருமான பியூஷ் கோயல் பேசியதாவது, "தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும். மேலும், மாநிலத்தின் வளர்ச்சி, தமிழ்க் கலாசாரம், சகோதர, சகோதரிகளின் நலனுக்கான ஆட்சியாக என்டிஏ ஆட்சி இருக்கும்.
திமுக அரசு வெளியேற்றப்பட்டு, மே 4-ல் என்டிஏ அரசு ஆட்சியமைக்கும். ஆட்சியமைப்பதில் சந்தேகமிருந்திருந்தால், தில்லியிலிருந்து இவ்வளவு தொலைவுக்கு நான் வந்திருக்க மாட்டேன்" என்று தெரிவித்தார்.
Advertisement
Advertisement
தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதியில் நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை நாளை (மே 4) நடைபெறவுள்ளது.
TN Polls 2026: Union Minister Piyush Goyal expresses confidence that the NDA alliance will definitely form the government following the elections
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.