முகப்பு
இந்தியா

நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!

நீட் தோ்வுக்கான ஹால் டிக்கெட் வெளியான நிலையில் தேர்வர்களின் மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Updated On : 27 ஏப்ரல், 2026 at 9:25 AM
நீட்.
பகிர்:

நீட் தோ்வுக்கான ஹால் டிக்கெட் வெளியான நிலையில் தேர்வர்களின் மன அழுத்தத்தைப் போக்க உதவி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,

நீட் தேர்வர்களே,

Advertisement

உங்கள் மனநலமும் நல்வாழ்வும் எங்களின் முதன்மையான முன்னுரிமையாகும். உங்கள் உயிரை விட எந்தத் தேர்வும் முக்கியமில்லை.

நீங்கள் மன அழுத்தம், பதற்றம் அல்லது மிகுந்த மனச்சுமையை உணர்ந்தால், உடனடியாக இந்த அதிகாரப்பூர்வ உதவி எண்களைத் தொடர்பு கொள்ளவும்:

டெலி-மனஸ் (24×7 தேசிய மனநல உதவி எண்)

14416 அல்லது 1-800-891-4416 .

இது 24 மணி நேரமும் இயங்கும் இலவச தொலைப்பேசி சேவை என்றும் இதில் ஆலோசனை பெறும் தேர்வர்களின் ரகசியங்கள் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

A helpline has been launched to provide mental health support for NEET aspirants following the release of admit cards.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.