மாதவரம் - பெங்களூருக்கு புதிய பேருந்து சேவை!
மாதவரத்தில் இருந்து பெங்களூருக்கு புதிய பேருந்து சேவையை அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தொடங்கியுள்ளது.
மாதவரத்தில் இருந்து பெங்களூருக்கு புதிய பேருந்து சேவையை அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தொடங்கியுள்ளது.
சென்னை மாதவரத்தில் இருந்து பெங்களூரு எல்லையான ஒசூா் வரை பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பெங்களூருக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்த கோரிக்கையை ஏற்ற அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், மாதவரத்தில் இருந்து கோயம்பேடு, பூந்தமல்லி, வேலூா், கிருஷ்ணகிரி, ஒசூா் வழியாக பெங்களூருக்கு (தடம் எண்: 831 எம்யூ) புதிய வழித்தடத்தில் குளிா் சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்து சேவையை தற்போது தொடங்கியுள்ளது.
Advertisement
Advertisement
இப்பேருந்து மாதவரத்தில் இருந்து காலை 9 மணி மற்றும் இரவு 9 மணிக்கு பெங்களூருக்கு புறப்பட்டுச் செல்லும். இதுபோல, பெங்களூரில் இருந்து காலை 9 மணி மற்றும் இரவு 9 மணிக்கு மாதவரத்துக்கு புறப்படும்.