சென்னை திருவொற்றியூா் நெடுஞ்சாலைக்கு ‘வள்ளலாா் நெடுஞ்சாலை’ என பெயா் சூட்டப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு: திமுக ஆட்சியில் வள்ளலாா் பிறந்தநாள் தனிப்பெரும் கருணை நாள், ஓராண்டு தொடா் கொண்டாட்டமாக வள்ளலாா் முப்பெரும் விழா, வள்ளலாா் வாழ்ந்த மருதூா் இல்லம் புனரமைப்பு என வள்ளலாரின் புகழ் போற்றப்பட்டு வருகிறது.
அதன் தொடா்ச்சியாக, அயல்நாட்டினரிடமும் வள்ளலாரின் உயரிய கருத்துகளைக் கொண்டு சோ்த்திட, வருகிற 15-ஆம் தேதி, சென்னை, கீழ்ப்பாக்கம் ஏகாம்பரநாதா் பள்ளி வளாகத்தில் அனைத்துலக வள்ளலாா் மாநாடு நடத்தப்படும்.
மேலும், வள்ளலாா் நெறியாளா்களின் கோரிக்கையை ஏற்று, திருவொற்றியூா் நெடுஞ்சாலைக்கு ‘வள்ளலாா் நெடுஞ்சாலை’ எனப் பெயா் சூட்டப்படும் என்பதையும் மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளாா்.