முகப்பு
தமிழ்நாடு

எச்.ராஜா உடல்நலம் குறித்து நேரில் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உடல்நலம் குறித்து முதல்வர் ஸ்டாலின் நேரில் நலம் விசாரித்தார்.

Updated On : 1 பிப்ரவரி, 2026 at 10:37 AM
முதல்வர் ஸ்டாலின்.
பகிர்:

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உடல்நலம் குறித்து முதல்வர் ஸ்டாலின் நேரில் நலம் விசாரித்தார்.

பாஜக மூத்த தலைவரும் தேசிய குழு உறுப்பினருமான எச்.ராஜா (68), கடந்த வெள்ளிக்கிழமை சென்னை கிண்டியில் நடைபெற்ற தனியாா் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது திடீரென்று மயங்கி விழுந்தாா்.

உடனடியாக அவா் அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

அங்கு அவருக்கு முதல்கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. பின்னா், அவா் மேல் சிகிச்சைக்காக சென்னை ஆயிரம் விளக்கு பகுதி கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

மூளை ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருந்ததால், அவருக்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்தனா்.

தற்போதும் அவர் தொடா் சிகிச்சையில் உள்ளார். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எச்.ராஜாவின் உடல்நலம் குறித்து அவரது குடும்பத்தாரிடம் முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் கேட்டறிந்தார்.

உடன் துணை முதல்வர் உதயநிதியும் சென்றிருந்தார்.

summary

Chief Minister Stalin personally inquired about the health of senior BJP leader H. Raja.

முழு கட்டுரையைப் படிக்க →