கிஷண் ரெட்டி கோப்புப் படம்
தமிழ்நாடு

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் 1.31 கோடி டன் மோனாசைட்!

தமிழ்நாடு உள்பட 8 மாநிலங்களில் 1.31 கோடி டன் மோனாசைட் கனிமம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு உள்பட 8 மாநிலங்களில் 1.31 கோடி டன் மோனாசைட் கனிமம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மோனாசைட் என்பது சிவப்பு-பழுப்பு நிற பாஸ்ஃபேட் கனிமமாகும். இது கனிம வளம் அதிகம் நிறைந்துள்ள கடலோர மணல் பரப்புகள், அனல் பாறைகளில் இருந்து முதன்மையாகப் பெறப்படுகிறது.

இந்நிலையில், மாநிலங்களவையில் நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்ததாவது: அணுசக்தி துறையின் கீழ், அணு கனிமங்கள் தேடல் மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் (ஏஎம்டி) செயல்படுகிறது.

தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், ஒடிஸா, மகாராஷ்டிரம், குஜராத், ஜாா்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய 8 மாநிலங்களின் கடலோர மணலில் 1.31 கோடி டன் மோனாசைட் இருப்பதாக ஏஎம்டி மதிப்பிட்டுள்ளது என்றாா்.

இதேபோல அந்த அவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிலக்கரித் துறை இணையமைச்சா் சதீஷ் சந்திர துபே அளித்த பதிலில், ‘கடந்த 2020-ஆம் ஆண்டு நீதி ஆயோக் பரிந்துரையைத் தொடா்ந்து, 136 நிலக்கரி சுரங்கங்கள் வெற்றிகரமாக ஏலம் விடப்பட்டுள்ளன. ஏலங்கள் மூலமாகத்தான் நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்’ என்றாா்.

தூத்துக்குடியில் இஎஸ்ஐ மருத்துவமனை எப்போது செயல்பாட்டுக்கு வரும்?: கனிமொழி கருணாநிதி கேள்வி

ஆத்தூா், தம்மம்பட்டி முருகா் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஏற்காடு மாண்ட்போா்ட் பள்ளியின் 109-ஆவது ஆண்டு விழா

மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி

திமுகவுடன் இரண்டு நாள்களில் தொகுதிப் பங்கீடு பேச்சு: காங்கிரஸ்

SCROLL FOR NEXT