முகப்பு
தமிழ்நாடு

5 மாநிலங்களில் ரூ. 408 கோடி! தமிழ்நாட்டில் ரூ. 189 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்!

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் பணம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பற்றி...

Updated On : 26 மார்ச் 2026, 4:38 pm IST
தமிழ்நாடு தலைமைத் தோ்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் - கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலானதில் இருந்து இதுவரை உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 189 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.

இதன்படி, தனிநபர் ஒருவர் எவ்வித ஆவணங்களும் இன்றி ரூ. 50,000 வரை ரொக்கமாக எடுத்துச் செல்லலாம். அதற்கு மேலாக உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பிற பொருள்கள் தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக தேர்தல் செலவினக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisement

இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது முதல் தமிழகத்தில் இதுவரை ரூ. 189 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் ரொக்கமாக ரூ. 4.7 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

5 மாநிலங்களில்...

தமிழகம், கேரளம், புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்கள் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறும் 6 மாநிலங்களில் நடத்தப்பட்ட சோதனையில் மொத்தமாக இதுவரை ரூ. 408.82 கோடி பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் பணமாக ரூ. 17.44 கோடி, மதுபானங்கள் ரூ. 37.68 கோடி, போதைப்பொருள் ரூ. 167.38 கோடி, தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலைமதிப்புள்ள பொருள்கள் ரூ. 23 கோடி, இலவச பொருள்கள் ரூ. 163.30 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

summary

Election Rules: Rs. 189 crore cash and goods have been seized in tamilnadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.