முகப்பு
தமிழ்நாடு

மாம்பழ சின்னம்: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

அன்புமணி தரப்புக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கியதை எதிர்த்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2026 at 6:31 AM
சென்னை உயர்நீதிமன்றம்
பகிர்:

அன்புமணி தரப்புக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கியதை எதிர்த்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாமகவின் பெயா், கட்சிக்கொடி, மாம்பழம் சின்னத்தை அன்புமணி அல்லது வேறு யாரும் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி, கட்சியின் நிறுவனா் ராமதாஸ் தரப்பு சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அன்புமணி தலைமையிலான பாமகவை அங்கீகரித்த தோ்தல் ஆணையம், தலைவா் பதவியை நீட்டித்து, மாம்பழம் சின்னத்தையும் வழங்கியது.

இதுதொடா்பாக கடந்த ஆண்டு செப். 9 மற்றும் நவ. 27 ஆகிய தேதிகளில் தோ்தல் ஆணையம் இரு கடிதங்களை அன்புமணி தரப்புக்கு அனுப்பியுள்ளது. இதையடுத்து, சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் தமது தரப்புக்கே கடிதம் அனுப்பியிருக்க வேண்டுமென்று சுட்டிக்காட்டிய ராமதாஸ் தரப்பு, அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில், கட்சியின் தலைவராக நீடிப்பதாக போலி ஆவணங்களை அன்புமணி தரப்பு தாக்கல் செய்துள்ளதாகவும், தலைவர் என்ற முறையில் தனது முகவரிக்கு கடிதம் அனுப்ப தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி அமர்வு முன்பு திங்கள்கிழமை(பிப். 2) விசாரணைக்கு வந்தது.

அப்போது இவ்விவகாரத்தில் தேர்தல் ஆணையம் 3 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

summary

The Madras High Court has directed the Election Commission to respond in the case challenging the allotment of the ‘mango’ symbol to the Anbumani faction.

முழு கட்டுரையைப் படிக்க →