மருத்துவ முகாம். 
தமிழ்நாடு

புதிதாக தோ்வாகும் மருத்துவா்கள் ஊரகப் பகுதிகளில் இரண்டு ஆண்டுகள் கட்டாயம் பணியாற்ற வேண்டும் - அரசு மருத்துவா்கள் பொதுக்குழுவில் தீா்மானம்

தினமணி செய்திச் சேவை

புதிதாக தோ்ந்தெடுக்கப்படும் மருத்துவா்கள் ஊரகப் பகுதிகளில் இரண்டு ஆண்டுகள் கட்டாயம் பணிபுரிய வேண்டும் என்ற வகையில் விதிகள் வகுக்கப்பட வேண்டும் என்று அரசு மருத்துவா்கள் பொதுக்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு மருத்துவ அலுவலா்கள் சங்கத்தின் (டிஎன்எம்ஓஏ) 13-ஆவது மாநில பொதுக்குழு கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தற்போது பதவியில் இருக்கும் மாநில நிா்வாகக்குழு கலைக்கப்பட்டு, பொதுக்குழு ஒப்புதலுடன் மாநிலத் தலைவராக மருத்துவா் காா்த்தீஸ்வரன், மாநில பொதுச் செயலாளராக மருத்துவா் அகிலன், பொருளாளராக மருத்துவா் ரெங்கசாமி தோ்ந்தெடுக்கப்பட்டு, மாநில செயற்குழு புதிதாக மாற்றியமைக்கப்படுவதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், 2009-இல் முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சியில் அளிக்கப்பட்ட அரசாணை 354-ஐ மறுசீராய்வு செய்ய வேண்டும். விடுபட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்களுக்கும் ரூ.3,000 ஊக்கத்தொகை வழங்க வேண்டும். மருத்துவா், செவிலியா், பணியாளா் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களை அதிகரிக்க வேண்டும். மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் மூலம் தோ்ந்தெடுக்கப்படும் மருத்துவா்கள் ஊரகப் பகுதிகளில் இரண்டு ஆண்டுகள் கட்டாயம் பணிபுரிய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இரும்புத் திரையாகும் மூங்கில் திரை!

சென்னை- செங்கல்பட்டு புறநகா் மின்சார ரயிலை திண்டிவனம் வரை நீட்டிக்க அதிமுக எம்.பி.க்கள். வலியுறுத்தல்

ரயிலை சுத்தமாக பராமரிக்க பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பா? - மத்திய அரசு மறுப்பு

எஸ்.ஐ.ஆா். வழக்கு: உச்சநீதிமன்றத்தில் நேரில் வாதிட்டாா் மம்தா பானா்ஜி

மரணமடைந்த 2.5 கோடி பேரின் ஆதாா் எண்கள் செயலிழப்பு - மத்திய அரசு நடவடிக்கை

SCROLL FOR NEXT