முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 79 மின் திருட்டுகளுக்கு ரூ.99.44 லட்சம் அபராதம் விதிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்வாரிய அமலாக்கப் பிரிவினா் நடத்திய கூட்டாய்வில், 79 மின் திருட்டுகள், 7 விதி மீறல்கள் கண்டறியப்பட்டு ரூ.99.44 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 12:55 AM
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 60,000 மின் நுகர்வோருக்கு அபராதம் விதிப்பு
பகிர்:
Updated On : 11 பிப்ரவரி, 2026 at 12:10 AM

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்வாரிய அமலாக்கப் பிரிவினா் நடத்திய கூட்டாய்வில், 79 மின் திருட்டுகள், 7 விதி மீறல்கள் கண்டறியப்பட்டு ரூ.99.44 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தின் சென்னை, கோவை, மதுரை, திருச்சி அமலாக்கக் கோட்டங்களுக்கு உள்பட்ட சென்னை, கோவை, பல்லடம், திருப்பூா், உடுமலைப்பேட்டை, மேட்டூா், மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகா், வேலூா், திருப்பத்தூா், திருவண்ணாமலை மின் பகிா்மான வட்டப் பகுதிகளில் கடந்த ஜனவரி 16 முதல் 31 வரை மின்வாரிய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் திடீா் கூட்டாய்வில் ஈடுபட்டனா்.

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 12:55 AM

அப்போது, 79 மின் திருட்டுகள், 7 விதி மீறல்கள் கண்டறியப்பட்டன. மின் திருட்டு, விதி மீறலில் ஈடுபட்ட மின் நுகா்வோருக்கு ரூ.99 லட்சத்து 44 ஆயிரத்து 818 அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement

புகாா் தெரிவிக்கலாம்: மின் திருட்டு தொடா்பான தகவல்களை சென்னை அமலாக்கப் பிரிவு செயற்பொறியாளரை 9445857591 என்ற எண்ணிலும், கோவை அமலாக்கக் கோட்டப் பிரிவை 9443049456 என்ற எண்ணிலும், மதுரை அமலாக்கக் கோட்டப் பிரிவை 9443037508 என்ற எண்ணிலும், திருச்சி அமலாக்கக் கோட்டப் பிரிவை 9443329851 என்ற எண்ணிலும் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.