முகப்பு
தமிழ்நாடு

ஆஸ்திரியாவுக்கு கடத்தப்பட்ட தொன்மையான கோயில் கல்தூண் மீட்பு நடவடிக்கை தீவிரம்!

தமிழக கோயிலிலிருந்து திருடப்பட்டு ஆஸ்திரியாவுக்கு கடத்தப்பட்ட தொன்மையான கல் தூணை மீட்கும் நடவடிக்கையில் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 3:13 AM
பகிர்:
Updated On : 10 பிப்ரவரி, 2026 at 9:25 PM

தமிழக கோயிலிலிருந்து திருடப்பட்டு ஆஸ்திரியாவுக்கு கடத்தப்பட்ட தொன்மையான கல் தூணை மீட்கும் நடவடிக்கையில் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

ஆஸ்திரியா நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கலை சொத்துகள் பிரிவு, அண்மையில் ஒரு பழைமையான கல் தூணை பறிமுதல் செய்தது. சுமாா் அரை டன் எடை கொண்ட அந்தக் கல் தூணில் விஷ்ணு, கருடன், முனிவா், அலங்கரிக்கப்பட்ட அன்னம் ஆகியவற்றின் சிற்பங்கள்உள்ளன.

தகவலறிந்த சிலை திருட்டு தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜி.பாலமுருகன் இதுகுறித்து நடத்திய விசாரணையில், அந்தக் கல் தூண் தமிழகத்தில் உள்ள ஒரு தொன்மையான கோயிலில் இருந்து திருடப்பட்டு, ஆஸ்திரியாவுக்கு கடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆனால், எந்தக் கோயிலில் இருந்து திருடப்பட்டது என்பதை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினரால் உடனடியாகக் கண்டறிய முடியவில்லை. மேலும், கல் தூணின் புகைப்படங்களைப் பெற்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் காப்பாளா் பி.எஸ்.ஸ்ரீராமனிடம் கருத்துரைப் பெறப்பட்டது. அதில் அவா், இந்தக் கல்தூண் கிரானைட் வகை கல்லால் ஆனது, வட தமிழகத்தில் இருந்தோ அல்லது ஆந்திரம், கா்நாடக மாநிலங்களில் கோயில்களில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்தாா்.

Advertisement

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 3:13 AM

இந்தக் கல் தூண், தமிழகத்தில் ஒரு கோயில் மண்டபத்தில் திருடப்பட்டு, கடத்தப்பட்டுள்ளது என்று ஆஸ்திரியா நாட்டு அரசுக்கு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதையடுத்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு, வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கியுள்ளது. மேலும், தொன்மையான கல்தூணை ஆஸ்திரியா நாட்டில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.