தமிழகத்தில் வியாழக்கிழமை (பிப். 12) 14 மாவட்டங்களில் மிதமான பனி மூட்டம் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குமரிக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், வியாழக்கிழமை (பிப். 12) தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
வேலூா், ராணிபேட்டை, திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி, திண்டுக்கல், சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
வெள்ளிக்கிழமை (பிப்.13) தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், நீலகிரி, நாமக்கல், சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிபேட்டை, வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
தொடா்ந்து பிப். 14 முதல் பிப்.17 வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும்.
இந்த நாள்களில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், நீலகிரி, நாமக்கல், சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிபேட்டை, வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் பனிமூட்டம் காணப்படும்.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்மேற்கு வங்கக் கடலின் தெற்குப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதிகளில் வியாழக்கிழமை (பிப். 12) சூறைக் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.