பாஜகவின் டப்பா என்ஜினுக்கு முன்னால், திராவிட மாடலின் சூப்பர் பாஸ்ட் என்ஜின் ஒருபோதும் தலைகுனியாது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
47 தொகுதிகளுக்கான திமுக வடக்கு மண்டல வாக்குச் சாவடி குழு பயிற்சி மாநாடு ஜோலார்பேட்டை மண்டலவாடியில் இன்று(பிப். 14) நடைபெற்றது. இதில் பங்கேற்ற திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
”நாம் போராடுவது திமுகவின் வெற்றிக்காக அல்ல, தமிழ்நாட்டின் வெற்றிக்காகவும்தான். பாஜகவின் டப்பா என்ஜினுக்கு முன்னால், திராவிட மாடலின் சூப்பர் பாஸ்ட் என்ஜின் ஒருபோதும் தலைகுனியாது.
டப்பா என்ஜினில் ஏறி கொத்தடிமைகள் மூலமாக தமிழ்நாட்டுக்கு புறவாசல் வழியாக வர நினைக்கும் பாஜகவின் எண்ணத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.
இதுவரை இல்லாத அளவுக்கு ஒவ்வொரு தொகுதியும் திமுகவின் கோட்டை என்று நிரூபித்துக் காட்ட வேண்டும். 2026 ஆம் ஆண்டு தேர்தல், பல ஆண்டுகளுக்கு அரசியல் ஆய்வாளர்கள் பேசும் வரலாற்று வெற்றியாக இருக்க வேண்டும்
பாஜகவின் கிளைக் கழக செயலாளர்போல இபிஎஸ் செயல்படுகிறார். தமிழ்நாட்டு மக்களுக்காக பேச துணிவு இல்லாமல் பாஜகவிடம் கொத்தடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டார் இபிஎஸ்.
ஆயிரம் ஆண்டுகளில் நின்று பேசுகிற சாதனைகளை ஐந்தே ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறோம். இப்படி சாதனைகளை செய்யக்கூடிய அரசு இந்தியாவிலேயே இல்லை என நமது அரசை பாராட்டி வடமாநில தொலைக்காட்சி சேனல்கள் உதாரணமாக காட்டுகின்றன.
2 மாதங்கள் ஓய்வை மறந்து உழைக்க வேண்டும். வாக்காளர்களை 5 முறையாவது சந்திக்க வேண்டும். என்னதான் வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் என சமூக ஊடகங்கள் வந்தாலும் மக்களை நேரில் சந்திப்பதற்கு இணையாகாது.
தேர்தல் அன்று வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்கும் வரை மக்களை கனிவாக அணுகிக் கொண்டே இருக்க வேண்டும்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.