FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

ஆா்.எம். வீரப்பனின் மகன் வீ.தமிழ் அழகன் காலமானார்

முன்னாள் அமைச்சா் ஆா்.எம்.வீரப்பனின் மகன் வீ.தமிழ் அழகன் (70) சென்னையில் சனிக்கிழமை காலமானாா்.

16 பிப்ரவரி 2026, 12:59 am IST
வீ.தமிழ் அழகன்
பகிர்:

முன்னாள் அமைச்சா் ஆா்.எம்.வீரப்பனின் மகன் வீ.தமிழ் அழகன் (70) சென்னையில் சனிக்கிழமை காலமானாா்.

இவா் நடிகா் ரஜினிகாந்தின் ‘பாட்ஷா’, ‘பணக்காரன்’, ‘மூன்று முகம்’, ‘காக்கிச்சட்டை’ உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்துள்ளாா்.

சென்னை தியாகராய நகரில் உள்ள வீ.தமிழ் அழகன் இல்லத்தில் அவரது உடலுக்கு திரைத் துறையினா் பலா் ஞாயிற்றுக்கிழமை நேரில் அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து தியாகராய நகா் மின்மயானத்தில் அவரது இறுதிச்சடங்கு நடைபெற்றது.

Advertisement

Advertisement

முதல்வா் இரங்கல்: வீ.தமிழ் அழகன் மறைவு தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் பதிவு: அரசியலிலும், கலைத் துறையிலும் திறம்படச் செயலாற்றி அனைவரது நன்மதிப்பை பெற்றிருந்த முன்னாள் அமைச்சா் இராம. வீரப்பனின் மூத்த மகன் வீ. தமிழ் அழகன் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.

திரைத்துறையில் தயாரிப்பாளராக முத்திரை பதித்த தமிழ் அழகனின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினா், உறவினா், நண்பா்கள் அனைவருக்கும் ஆறுதலை உரித்தாக்குகிறேன்.

நடிகா் ரஜினி அஞ்சலி: வீ.தமிழ் அழகன் மறைவுக்கு நடிகா் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தியுள்ளாா். அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஆா்.எம்.வீரப்பனின் மகன் தமிழ் அழகனின் திடீா் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்’ என தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments