இடைக்கால வேளாண் பட்ஜெட் தாக்கல்! அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உரை!
தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல்...
2026 -27 ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால வேளாண் நிதிநிலை அறிக்கையை தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்து வருகிறார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026 - 27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று(பிப். 17) தாக்கல் செய்து உரையாற்றினார்.
காலை 9.30 மணிக்கு தனது உரையைத் தொடங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு, பல்வேறு துறைகள் மீதான சாதனைகள், அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில் 2 மணி நேரம் 22 நிமிடங்கள் உரையாற்றினார்.
இதையடுத்து 2026 -27 ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால வேளாண் நிதிநிலை அறிக்கையை தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
வேளாண் துறையில் கடந்த 5 ஆண்டுகளில் அரசு மேற்கொண்ட திட்டங்களையும் வேளாண் மக்கள் பெற்ற பயன்களையும் விளக்கி வருகிறார்.