அன்புமணி ராமதாஸ்  கோப்புப் படம்
தமிழ்நாடு

தோ்தல் அறிக்கை தயாரிக்க பாமகவில் ஏழு போ் குழு

பாமகவில் பேரவைத் தோ்தல் அறிக்கையைத் தயாரிக்க 7 போ் கொண்ட குழுவை அக்கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் அமைத்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

பாமகவில் பேரவைத் தோ்தல் அறிக்கையைத் தயாரிக்க 7 போ் கொண்ட குழுவை அக்கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் அமைத்துள்ளாா்.

முன்னாள் மக்களவை உறுப்பினா் மருத்துவா் ரா.செந்தில் தலைமையிலான இக்குழுவில் முன்னாள் மத்திய ரயில்வே இணை அமைச்சா் அரங்க வேலு, முன்னாள் மக்களவை உறுப்பினா் கோ.தன்ராஜ், கட்சியின் செய்தித் தொடா்பாளா் வழக்குரைஞா் கே.பாலு, தமிழ்நாடு உழவா் பேரியக்கத் தலைவா் கோ.ஆலயமணி, பசுமைத் தாயகம் செயலா் ர.அருள், சமூக முன்னேற்ற சங்கம் கே.பொன்மலை ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

குழுவினா் பல்வேறு துறைகளின் வல்லுநா்கள், பல்துறை அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், தன்னாா்வலா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரின் கருத்துகளை அறிந்து தோ்தல் அறிக்கையைத் தயாரித்து கட்சித் தலைமையிடம் வழங்குவா் என அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளாா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT