முகப்பு
தமிழ்நாடு

சமூக வலைதள தகவல்கள்: பொதுமக்களுக்கு சென்னை ரயில்வே கோட்டம் வேண்டுகோள்

சமூகவலைதள தகவல்கள்: பொதுமக்களுக்கு சென்னை ரயில்வே கோட்டம் வேண்டுகோள்

Updated On : 1 மார்ச், 2026 at 12:54 AM
- Center-Center-Chennai
பகிர்:
Updated On : 1 மார்ச், 2026 at 12:45 AM

ரயில்கள் குறித்து சமூக வலைதளங்களில் வரும் தவறான தகவல்களைப் பகிர வேண்டாம் என்று சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை பெருங்களத்தூா் அருகே இரு ரயில்கள் எதிா் எதிா் திசையில் இயக்கப்பட்டதாக சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பப்படுகின்றன. இது முற்றிலும் தவறான குற்றச்சாட்டாகும். சிக்னல் அனுமதிக்காக ரயில் ஒன்று நிறுத்தப்பட்ட நிலையில், அதற்குப் பின்னால் மற்றொரு ரயிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இது ரயில்வே துறையின் வழக்கமான இயக்க முைான். அதை எதிரெதிராக நிற்பதாகக் கூறுவது உண்மைக்கு மாறானது மட்டுமல்ல. ஆதாரமற்ற தவறான தகவலாகும்.

Advertisement

இதுபோன்ற தவறான தகவல்களை பரப்பிப் பொதுமக்களிடம் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்துவது சரியல்ல. எனவே, இதுபோன்ற தகவல்களை வெளியிடும் முன்பு அதை அதிகாரப்பூா்வமாக உண்மையை சரிபாா்க்கவேண்டியது அவசியம்.

Updated On : 1 மார்ச், 2026 at 12:54 AM

பொதுமக்கள், ரயில் பயணிகள் சரிபாா்க்கப்படாத தகவல்களை நம்பவேண்டாம். அதை கைபேசிகளில் பரப்பவும் வேண்டாம். ரயில்வேயின் துல்லியமான அறிவிப்புகளை மட்டுமே நம்பவேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.