புலம்பும் த்ரிஷா... என்ன ஆச்சு?
நடிகை த்ரிஷாவின் இன்ஸ்டா பதிவு வைரல்...
நடிகை த்ரிஷாவின் இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விஜய் சேதுபதி, சிம்பு உள்ளிட்டோருடன் ஜோடியாக நடித்து தவிர்க்க முடியாத நாயகியாகவே உள்ளார்.
தற்போது, சூர்யாவுடன் கருப்பு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அண்மையில், நடிகர் விஜய் உடன் பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்காக விமர்சனங்களையும் எதிர்கொண்டார்.
Advertisement
Advertisement
நடிகையாக இருப்பதால் இயல்பாகவே வதந்திகளும், தகவல்களும் பரிமாறப்படும் என்றாலும் த்ரிஷா விஷயத்தில் ஏதேனும் புதிது புதிதாக நடந்துகொண்டே இருக்கின்றன.
விஜய்யுடனான பொதுமேடை வருகைக்குப் பின்பே இத்தாக்குதல்கள் அதிகரிக்கவும் செய்திருப்பதால், சில நேரங்களில் இதனைத் தாங்க முடியாமல் த்ரிஷா இன்ஸ்டாகிராமில் பதிலடியும் கொடுப்பார். அப்படி, புதிய பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “நான் சினிமாவை விட்டுவிட்டு ஒரு பணக்கார தொழிலதிபரைத் திருமணம் செய்துகொண்டு நேற்று இரண்டு வயது நிறைவடைந்த நான்கு குழந்தைகளைப் வளர்த்துக்கொண்டிருக்கிறேன். இதில் நான் ஏதாவது சேர்க்க வேண்டுமா? இல்லை, இன்றைக்கான கற்பனைக்கு இதுபோதுமா?” எனக் கேட்டுள்ளார். அண்மை காலமாக, த்ரிஷாவைக் குறித்து புதிது புதிதாக வதந்திகளும், செய்திகளும் வந்துகொண்டிருப்பதே இப்பதிவுக்கான காரணம் எனத் தெரிகிறது.
actor trisha post on instagram about rumours around her
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.