00:00! மிக அதிக கருத்துகளைப் பெற்ற பிறந்த நாள் பதிவு!
நடிகை த்ரிஷாவின் பதிவு லட்சக் கணக்கான காமெண்ட்களை பெற்று வருகிறது...
முதல்வர் விஜய்யின் பிறந்த நாளுக்கு நடிகை த்ரிஷா கேக் வெட்டிய பதிவு மிக அதிகளவில் கவனிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ல் இந்தியளவில் அவருக்குப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். கடந்தாண்டு வரை நடிகராக இருந்தவர் தற்போது மாநிலத்தின் முதல்வர் என்பதால் பல அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்தினர்.
எவ்வளவு வாழ்த்துகள் வந்தாலும் நடிகை த்ரிஷாவிடமிருந்து எந்த வாழ்த்துச் செய்தியும் வராததால் ரசிகர்கள் மீம்ஸ்களை பகிர்ந்து வந்தனர். ஆனால், எதிர்பாராத விதமாக ஒருநாள் கழித்து நேற்று (ஜூன் 23) மாலை திடீரென த்ரிஷா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல்வர் விஜய்க்கு அருகே கேக்களுடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தைவெளியிட்டார்.
Advertisement
Advertisement
அதில், “அனைத்தையும் அர்த்தமுள்ளதாக மாற்றியவருக்கு... பிறந்த நாள் வாழ்த்துகள்” எனக் கூறியதுடன், 00:00 என்பதையும் குறிப்பிட்டிருந்தார். அப்படியென்றால், முதன் முதலாக வாழ்த்திய நபர் என்று பொருள்.
இதற்குத்தான் காத்திருந்தது போல், ஒரு மணி நேரத்திற்குள்ளேயே லட்சக் கணக்காணோர் அப்பதில் இருவரையும் வாழ்த்தியும் எதிர்மறை கருத்துகளைக் கூறியும் காமெண்ட் செய்தனர்.
தற்போது வரை, இன்ஸ்டாவில் 45 லட்ச விருப்பங்களைப் பெற்ற இப்பதிவு 3 லட்சத்திற்கும் அதிகமான காமெண்ட்களையும் பெற்றுள்ளது. இந்தியளவில் ஒரு பிறந்த நாள் பதிவுக்கு இவ்வளவு காமெண்ட் வந்தது த்ரிஷா - முதல்வர் விஜய் பதிவுக்குதான் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன!
The post showing actress Trisha cutting a cake for Vijay's birthday has garnered significant attention.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.