விமானத்தில் முகத்துக்கு ஷீட் மாஸ்க் பயன்படுத்திய த்ரிஷா! ஒரே ஒரு சந்தேகம்?
விமானத்தில் நடிகை த்ரிஷா முகத்துக்கு ஷீட் மாஸ்க் பயன்படுத்தியது குறித்து ஒரு சந்தேகம்
விமான பயணத்தின்போது, முகத்துக்கு ஷீட் மாஸ்க் பயன்படுத்தியிருந்த புகைப்படம் ஒன்றை நடிகை த்ரிஷா பகிர்ந்திருந்தார்.
இது தற்போது சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. விமானத்தில் ஷீட் மாஸ்க் பயன்படுத்தலா? பொதுவாக பயணத்தின்போது இதனைப் பயன்படுத்துவது நல்லதா என்பது போன்ற எண்ணற்றக் கேள்விகள் எழத் தொடங்கிவிட்டன்.
பெண்களுக்கு தங்களது சருமத்தை பாதுகாப்பது என்பது மிகப்பெரிய கவலை. அதிலும் நடிகைகள் என்றால் சொல்லவே வேண்டாம். எப்போதும் பயணம், ஷுட்டிங் என பிஸியாக இருக்கும்போது, அழகையும் பராமரிக்க வேண்டும் என்பதால் அவர்களுக்கு அது மிகப்பெரிய சவாலாக மாறலாம்.
Advertisement
Advertisement
வீட்டிலிருக்கும்போது சீரம், மாய்சுரைசர், மாஸ்க்ஸ், சன்ஸ்கிரீன் என எல்லாவற்றையும் போடலாம். ஆனால், வெளியூர், வெளிநாடு பயணத்தின்போது சருமத்தை அப்படியே விட்டுவிட முடியுமா என்ன?
அண்மையில், ஆஸ்திரேலியா சென்றிருந்த போது எடுத்த புகைப்படங்களை நடிகை த்ரிஷா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். அதில், அவர் விமானத்தில் முகத்துக்கு ஷீட் மாஸ்க் பயன்படுத்தியிருந்த புகைப்படங்களையும் பதிவிட்டிருந்தார்.
இது ஏதோ ஒரு பிரபலம் முதல் முறையாக இதுபோன்று செய்கிறார் என்பதெல்லாம் இல்லை. ஏற்கனவே ஏராளமான பிரபலங்கள் இதுபோன்ற புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்கள்.
சரி இதிலென்ன பிரச்னை?
இருக்கிறதே, இதைப் பார்த்த பல பெண்களும், பயணத்தின்போது ஷீட் மாஸ்க் பயன்படுத்தலாமா, சருமத்தை வறட்சியாக்கிவிடாதா என்றெல்லாம் கேள்விகளை எழுப்பத் தொடங்கிவிட்டனர்.
உண்மையில், ஏதேனும் ஒரு ஷீட் மாஸ்க் பயன்படுத்தக் கூடாதாம். சுற்றுச்சூழல், தட்பவெப்பத்துக்கு ஏற்பத்தான் அந்த ஷீட் மாஸ்க் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும், நெடுநேரம் விமானத்தில் பயணிக்கும்போது ஏற்படும் ஒரு டல்நஸ் போக்கவும் இந்த மாஸ்க் பயன்படும். சருமம் வறண்டு போகாமல் செய்யும் மாஸ்க்குகள் வந்துவிட்டன. அவை நல்ல பொலிவை தரும் என்றும் கூறப்படுகிறது.
அது மட்டுமல்ல, வெறுமனே ஷீட் மாஸ்க் போட்டு விட்டுவிடக் கூடாது. அதன்பிறகு, தனித்துவமான சீரம், மாய்சுரைசர்களை பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், எதிர்பார்த்த பலன் கிடைக்காது என்றும் கூறப்படுகிறது.
எனவே, அனைவரும் த்ரிஷாவைப் பார்த்து பயணங்களின்போது ஷீட் மாஸ்க் பயன்படுத்த வேண்டாம். ஒவ்வொருவரின் சருமத்துக்கும் ஏற்ப, நிபுணர்களின் ஆலோசனை பெற்று பயன்படுத்துவது சாலச்சிறந்தது என்றும் கூறப்படுகிறது.
Trisha used a sheet mask on her face while on a flight! Just one doubt?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.