வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு  
தமிழ்நாடு

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை நிலவரம் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

நசிலிண்டர் விலை: சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 110 உயர்ந்துள்ளது.

எனினும், வீட்டுப் பயன்பாட்டுக்கான சிலிண்டர்கள் விலை மாற்றமின்றி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தை நிலவரப்படி சமையல் எரிவாயு உருளை விலை மாதந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஜனவரி 1 ஆம் தேதியான இன்று ரூ. 110 உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.1849.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வர்த்தக சிலிண்டர்களின் விலை புது தில்லியில் ரூ.1,690 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1,641.50 ஆகவும், மும்பையில் ரூ.1,641.50 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வீட்டு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை

எனினும், வீடுகளில் பயன்படுத்தக்கூடிய 5 கிலோ, 10 கிலோ, 14.2 கிலோ சமையல் எரிவாயு உருளையின் விலையில் மாற்றமின்றி விற்பனையாகிறது. அதன்படி, சென்னையில் ரூ. 868.50 ஆக தொடர்கிறது.

வீட்டுப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை புது தில்லியில் ரூ. 853 ஆகவும், கொல்கத்தாவில் ரூ. 852 ஆகவும், மும்பையில் ரூ. 582 ஆகவும் விற்பனையாகி வருகிறது.

கடந்த 2 மாதங்களாக வர்த்தக சிலிண்டர்களின் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், ஜனவரியில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Commercial LPG cylinder prices increased

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2026 வந்தாச்சு!பொதுமக்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடிய காவல்துறையினர் !

புத்தாண்டில் பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஆட்டோ, மீடியா பங்குகள் உயர்வு!!

டிமான்டி காலனி - 3 முதல் போஸ்டர்!

எம்ஐ அணியை நொறுக்கிய பிரெவிஸ் - ரூதர்போர்டு..! 4 ஓவர்களில் 83 ரன்கள்!

ஆடல் பாடலுடன் துவங்கிய 2026! பிரமிக்க வைத்த Drone-கள் அணிவகுப்பு!

SCROLL FOR NEXT