ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருது பெற்றவர்களுடன் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மா. சுப்பிரமணியன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைவா் மனோஜ் குமாா் சொந்தாலியா, குழுமத்தின் தலைமைச் செயல் நிர்வாகி லட்சுமி மேனன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் ஆசிரியர் குழு இயக்குநர் பிரபு சாவ்லா, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் சந்த்வானா பட்டாச்சார்ய, தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன். 
தமிழ்நாடு

ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருதுகள்! குடியரசுத் துணைத் தலைவர் வழங்கினார்

ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருதுகளை குடியரசுத் துணைத் தலைவர் வழங்கி கௌரவித்தார்.

இணையதளச் செய்திப் பிரிவு

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சாா்பில் ‘ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான்’ விருதுகள் இன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டன.

விருதுகள் வழங்கும் விழாவின் தொடக்கமாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத் தலைவர் - மேலாண் இயக்குநர் மனோஜ் குமார் சொந்தாலியா வரவேற்றுப் பேசினார். தொடர்ந்து விழாவின் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.

விருது பெறுவோர் தெரிவு செய்யப்பட்ட முறை பற்றியும் விருது பெறுவோர் விவரங்களையும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் சந்த்வானா பட்டாச்சார்ய அறிவித்தார்.

கன்னட எழுத்தாளர் சந்திரசேகர கம்பாராவுக்கு ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

புனைவுக்கான பிரிவில் 'டேல்ஸ் ஃபிரம் தி டான்-லிட் மெளண்ட்டெயின்ஸ்' என்ற நூலை எழுதிய சுபி தாபாவுக்கு வழங்கப்பட்டது.

அ-புனைவுக்கான பிரிவில் 'ஃபாலன் சிட்டி - எ டபுள் மர்டர், பொலிடிகல் இன்சானிடி அன்ட் தில்லி டெசென்ட்' என்ற நூலை எழுதிய சுதீப் சக்ரவர்த்திக்கு விருது வழங்கப்பட்டது.

சிறந்த அறிமுக எழுத்தாளர் விருது 'த மெனி லிவ்ஸ் ஆஃப் சயேதா எக்ஸ் : முகமறியாத இந்தியனின் கதை' என்ற நூலை எழுதிய நேகா தீட்சித் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் குடியரசுத் துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்று, விருது பெறத் தேர்வான இலக்கிய படைப்பாளிகளுக்கு விருது வழங்கி கௌரவித்தார்.

விருதுகள் பெற்றவர்கள் ஏற்புரை நிகழ்த்தினர்.

நிறைவில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத் தலைமைச் செயல் அலுவலர் லட்சுமி மேனன் நன்றி கூறினார்.

எழுத்துலகில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துவரும் படைப்பாளிகளைப் பெருமைப்படுத்தும் வகையில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் (டிஎன்ஐஇ) குழுமம், ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.

The Vice President honored the Ramnath Goenka Sahitya Samman Awards.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாகித்திய சம்மான் விருது விழா: புனைவுக்கான பிரிவில் விருது பெற்ற எழுத்தாளர் சுபி தாபா!

சாய் சுதர்சனுக்கு காயம்; 6 வாரங்களுக்கு கிரிக்கெட் விளையாடுவது கடினம்!

நீதிக் கதைகள்! குல்பி ஆமையின் நன்னயம்!

ஜம்மு - காஷ்மீர் கிரிக்கெட் வீரரின் தலைக்கவசத்தில் பாலஸ்தீன கொடி! காவல் துறை விசாரணை!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 22 காசுகள் சரிந்து ரூ.90.20 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT