முதல்வர் ஸ்டாலின் கோப்புப்படம்
தமிழ்நாடு

எல். கணேசன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

திமுக மூத்த தலைவர் எல். கணேசனின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

திமுக மூத்த தலைவர் எல். கணேசனின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், மொழிப்போர்க் களத்தில், இந்திமொழியின் ஆதிக்கத்திற்கு எதிராகப் புறப்பட்ட மாணவர் படையின் தளகர்த்தர்களில் ஒருவரும் - கட்சி உயர்நிலைச் செயல்திட்டக் குழு உறுப்பினருமான எல். கணேசன் மறைந்த செய்தியால் பெரிதும் துயருற்றேன்.

சட்டமன்றம் - சட்டமேலவை - நாடாளுமன்றம் என முழங்கிய அவரை இனி நாம் காண முடியாது என்பதை எண்ணும்போதே உள்ளம் வேதனையால் துடிக்கிறது. தலைவர் கலைஞரின் பாசத்தைப் பெற்ற 'எல்.ஜி.', 1989-இல் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, அவரது பாராளுமன்றச் செயலாளராகவும் இருந்தார். நான் தஞ்சை மாவட்டத்திற்குச் செல்லும்போதெல்லாம் தவறாது அவரது இல்லத்திற்குச் செல்வேன்; அவரும் புன்சிரிப்புடன் வரவேற்று, நம் திராவிட மாடல் அரசின் திட்டங்கள் மக்களிடம் பெற்றுள்ள வரவேற்பு குறித்து மகிழ்ச்சி பொங்கப் பெருமையோடு சொல்வார்.

திராவிட இயக்கக் கொள்கைகள் மீது பற்றுகொண்டு, மக்களின் நன்மதிப்பைப் பெற்று அரசியல் களத்தில் பணியாற்றிய அவர் என்றும் நம் நெஞ்சங்களில் நிறைந்திருப்பார். அவரது பிரிவால் வாடும் கழக உடன்பிறப்புகள், குடும்பத்தினர், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

CM and DMK president M K Stalin on Sunday expressed deep sorrow over the passing of senior Dravidian leader and DMK high-level action committee member L Ganesan, recalling his long and principled public life.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாம்பியன்கள் கெளரவிப்பு - புகைப்படங்கள்

வங்கதேச முஸ்லிம் தொழிலாளர்கள் மீது ஹிந்து அமைப்பினர் தாக்குதல்!

ட்ரென்ட் பங்குகள் 9% சரிவு!

திடீரென நீக்கப்பட்ட மான்செஸ்டர் யுனைடெட் மேலாளர்..! புலம்பும் ரசிகர்கள்!

குத்துப் பாடலா? தெய்வீகப் பாடலா? எதிர்பார்ப்பைக் கூட்டும் திரௌபதி 2 பட பாடல்!

SCROLL FOR NEXT