வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,680க்கு விற்பனையாகிறது. மேலும் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,01,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,575க்கு விற்பனையாகிறது. அதேசமயம் சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.84,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ஒரு கிராம் ரூ.265க்கும், கிலோவுக்கு மட்டுமே ரூ.8000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,65,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சமீபகாலமாக தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.