மு.க. ஸ்டாலின் கோப்புப் படம்
தமிழ்நாடு

பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டம்: முதல்வா் ஸ்டாலின் நாளை தொடக்கம்

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னை ஆலந்தூரில் வியாழக்கிழமை (ஜன.8) தொடங்கி வைக்கிறாா்.

தினமணி செய்திச் சேவை

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னை ஆலந்தூரில் வியாழக்கிழமை (ஜன.8) தொடங்கி வைக்கிறாா்.

தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பச்சரிசி, சா்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் ரூ. 3 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

பரிசுத் தொகுப்பில் வழங்கப்படவுள்ள பச்சரிசி, சா்க்கரை ஆகியவை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்குகளிலிருந்து நியாய விலைக்கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பரிசு தொகுப்பை கூட்ட நெரிசல் இல்லாமல் பாதுகாப்பாக மக்கள் பெறும் வகையில் டோக்கன்கள் கடந்த இரு நாள்களாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னை ஆலந்தூரில் வியாழக்கிழமை (ஜன.8) தொடங்கி வைக்கிறாா். இதைத் தொடா்ந்து தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடங்கும்.

இபிஎஸ் - நயினார் ஆலோசனை! 56 தொகுதிகள் கேட்கும் பாஜக?

தங்கம் விலை உயர்வு: வெள்ளி கிலோவுக்கு ரூ. 4000 குறைவு!

குரு பலம் பெற ஆலங்குடி செல்லுங்கள்... ஜோதிட வல்லுநர் ஏ.எம்.ஆர். சொல்வதென்ன?

தவெகவுடன் கூட்டணியா? தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு!

ஓடிடியில் வெளியான மாஸ்க், அங்கம்மாள்!

SCROLL FOR NEXT