தங்கம், வெள்ளி விலை நிலவரம் PTI
தமிழ்நாடு

தங்கம் - வெள்ளி விலை குறைந்தது: மாலை நிலவரம்!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம் பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை உயர்ந்திருந்த நிலையில், வர்த்தகம் நிறைவுபெறும்போது குறைந்துள்ளது.

கடந்த சில நாள்களாக தங்கம் விலை ஒரு லட்சத்தைத் தாண்டி தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் தொடர்ந்து உயர்ந்து வருவது மக்கள் மத்தியில் கவலையை அதிகரித்துள்ளது.

இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும், ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 40 உயர்ந்து ரூ. 12,870-க்கும், ஒரு சவரன் ரூ. 320 அதிகரித்து 1,02,960-க்கும் விற்பனையானது. அதேபோன்று வெள்ளி கிலோவுக்கு ரூ. 12 ஆயிரம் உயர்ந்தது.

இந்த நிலையில், வர்த்தகம் நிறைவுபெறும்போது ஒரு சவரன் தங்கம் ரூ.560 குறைந்து ரூ. 1,02,400-க்கும், ஒரு கிராம் ரூ. 70 குறைந்து ரூ. 12,800-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

இன்று காலையில் 320 உயர்ந்த நிலையில், மாலையில் ரூ. 560 குறைந்துள்ளது.

அதேபோன்று வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 6 ஆயிரம் குறைந்து ரூ. 2,77,000-க்கும், ஒரு கிராம் ரூ. 6 குறைந்து ரூ. 277-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

In Chennai, the price of gold jewelry, which had risen this morning, has decreased by the end of trading.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடையின்றி செல்ல வேண்டாம்: சென்னையில் அடுத்த 2 நாள்களுக்கு கனமழை!

தமிழகத்தில் 3 நாள்களுக்கு கனமழை தொடரும்!

இந்த வார ஓடிடி படங்கள்!

சிறந்த படங்களுக்கான ஆஸ்கர் பட்டியலில் 4 இந்திய படங்கள்!

கோடியக்கரையில் கடல் சீற்றம்: மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை!

SCROLL FOR NEXT