தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் 
தமிழ்நாடு

கூட்டணி பற்றி பேசினாரா எடப்பாடி பழனிசாமி? ராமதாஸ் பதில்

தேர்தல் கூட்டணி பற்றி எடப்பாடி பழனிசாமி பேசினாரா என்பது குறித்து ராமதாஸ் பதிலளித்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

விழுப்புரம்: தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாரா என்பது குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பதிலளித்துள்ளார்.

2026 சட்டப் பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி என்னிடம் எதுவும் பேசவில்லை என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் அவர், வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

அன்புமணி கட்சியில் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்டவர். அவர் எந்த அரசியல் கட்சியுடனும் தேர்தல் கூட்டணி குறித்து பேசினால் அது செல்லாது. அது கட்சியின் விதிகளுக்கு முரணானது.

மேலும் புதுதில்லி நீதிமன்ற வழங்கியுள்ள தீர்ப்பை அவமதிப்பதாகும். கட்சியின் நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி தேர்தல் கூட்டணி குறித்து ஒரு சில தினங்களில் அறிவிக்கப்படும்.

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி என்னிடம் தேர்தல் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்றார் மருத்துவர் ராமதாஸ்.

பேட்டியின்போது பாமக செயல் தலைவர் ஸ்ரீகாந்தி ராமதாஸ், கெளரவத் தலைவர் ஜி.கே. மணி, பாமக சட்ட ஆலோசகர் அருள் ஆகியோர் உடனிருந்தனர்.

Ramadoss has responded to the question of whether Edappadi Palaniswami spoke about an election alliance.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அக்‌ஷர் படேல் பிளேயிங் லெவனில் இடம்பெற வேண்டும்: ரவி சாஸ்திரி

தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்த சிறந்த பண்பாளர் நல்லகண்ணு: இபிஎஸ் இரங்கல்

பெய்ஜிங் சென்றார் ஜெர்மனி பிரதமர்! ஐரோப்பிய நாடுகளுடன் வலுக்கும் சீனாவின் கூட்டணி!

1800 பேருக்கு வேலைவாய்ப்பு! திருநெல்வேலி, விருதுநகர், ஈரோடு மாவட்டங்களில் டைடல் நியோ பூங்காக்கள்!

யூடியூபில் வெளியானது மரியா!

SCROLL FOR NEXT