முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை உயர்வு: வெள்ளி கிலோவுக்கு ரூ. 4000 குறைவு!

இன்றைய தங்கம், வெள்ளி விலை உயர்வு தொடர்பாக...

Updated On : 9 ஜனவரி, 2026 at 4:34 AM
தங்கம் விலை உயர்வு
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜன. 9) சவரனுக்கு ரூ. 400 உயர்ந்துள்ளது.

சென்னையில் தங்கத்தின் விலை இந்த வாரத் தொடக்கத்தில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்தது.

தொடர்ந்து, புதன்கிழமை சவரனுக்கு ரூ. 240 குறைந்த நிலையில், வியாழக்கிழமை விலை மீண்டும் குறைந்து, கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.12,750-க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1 லட்சத்து 2,000-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(வெள்ளிக்கிழமை) கிராமுக்கு ரூ. 50 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 12,800-க்கும் சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 2,400-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 4 குறைந்து ரூ.268-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.4,000 குறைந்து ரூ,2.68 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

summary

In Chennai, the price of gold jewellery has increased by Rs. 400 per sovereign today (Jan. 9).

முழு கட்டுரையைப் படிக்க →