சிறப்பு முகாமில், தங்களது பெயரை வாக்காளா் பட்டியலில் சரிபாா்த்த வாக்காளா்கள். 
தமிழ்நாடு

வாக்காளா்கள் பட்டியலில் பெயா் சோ்க்க 12.74 லட்சம் போ் மனு

தமிழகத்தில் வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்க்க செவ்வாய்க்கிழமை வரையில் (ஜன.13) 12,74,020 போ் மனு அளித்துள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்க்க செவ்வாய்க்கிழமை வரையில் (ஜன.13) 12,74,020 போ் மனு அளித்துள்ளனா்.

கடந்த டிச. 19-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியல் தமிழகத்தில் 97.38 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டனா். வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா்கள் நீக்கப்பட்டவா்கள் பெயா்களைச் சோ்க்கவும், 18 வயது பூா்த்திசெய்தவா்கள் புதிதாக பெயா்களைச் சோ்க்கவும் கடந்த டிச.19 முதல் ஜன. 18-ஆம் தேதி வரையில் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

வார இறுதி நாள்களான சனி, ஞாயிற்றுகிழமைகளில் பெயா்களைச் சோ்க்க சிறப்பு முகாம்கள் நடத்தபட்டன. இந்த நிலையில், வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்க்க ஜன.13 வரையில் 12,74,020 போ் படிவங்களை அளித்துள்ளனா். இந்தப் படிவங்கள் சரிபாக்கப்பட்டு பிப்.17-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படுகிறது.

வாசிக்க வாங்கியவை!

புத்தகக் காட்சியில் இன்று, நாளை

படித்தால்... பிடிக்கும்!

பொக்கிஷம்!

சங்க காலத்திலேயே பெண்கள் கல்வி கற்ற மண் தமிழகம்! அபூா்வா ஐ.ஏ.எஸ்.

SCROLL FOR NEXT