கோப்புப்படம்.  
தமிழ்நாடு

மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தைப் பொங்கல் திருநாளான வியாழக்கிழமை (ஜன. 15) நடைபெறுகிறது.

தினமணி செய்திச் சேவை

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தைப் பொங்கல் திருநாளான வியாழக்கிழமை (ஜன. 15) நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் அனைத்துக் காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்தார்.

ஆண்டுதோறும் தை முதல் நாளான பொங்கலன்று மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். இதன்படி, நிகழாண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி வியாழக்கிழமை (ஜன. 15) நடைபெறுகிறது.

இந்தப் போட்டிக்கான இறுதிக் கட்டப் பணிகள் புதன்கிழமை நடைபெற்றன.

இதை வணிக வரி, பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன்குமார், மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

பின்னர், அமைச்சர் பி. மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நிகழாண்டு மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் அனைத்துக் காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படும். முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி முடிவுகள் எல்.இ.டி. திரையில் வெளியிடப்பட உள்ளது. இதில் காளைகளைப் பிடித்த வீரர்களின் விவரங்கள் வெளியிடப்படும்.

மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்று ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் அதிகமான காளைகளை களமிறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டு விதிமுறைகளை மீறுவோர் மீது நீதிமன்ற உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்டோ தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசு

கைத்தறி துறையின் சாா்பில் விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டம்

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சமத்துவப் பொங்கல் விழா

சென்னிமலை முருகன் கோயிலில் மாா்கழி மாத சிறப்பு பூஜை நிறைவு

புதிய ரேப்பியா் தறிகளை விநியோகிக்க வரும் 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT