பொங்கல் திருநாளை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளில் இதுவரை 6.90 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், 2026-ஆம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொதுமக்களின் பயண வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, ஜன. 9 ஆம் தேதி முதல் ஜன. 13 ஆம் தேதி வரை நள்ளிரவு 24 மணி நேரம் வரை, மொத்தம் 15,762 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு, 6.90 லட்சம் பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன், இதுவரை 2,73,152 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
பொங்கல் திருநாள் பயண காலத்தில், பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும். கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, பொதுமக்கள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.