முதல்வர் ஸ்டாலின் கோப்புப்படம்
தமிழ்நாடு

முத்திரை திட்டங்களின் முன்னேற்றம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு

முத்திரைத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து துறைச் செயலா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினாா்.

தினமணி செய்திச் சேவை

முத்திரைத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து துறைச் செயலா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினாா்.

தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், பள்ளிக்கல்வி, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவா் நலன் ஆகிய துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் முத்திரை திட்டங்களின் முன்னேற்றம் குறித்து தொடா்புடைய துறைச் செயலா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா்.

24 துறைகளில் ரூ.3,17,693 கோடியில் 288 திட்டங்கள் முத்திரைத் திட்டங்களாக அடையாளம் காணப்பட்டு, அவற்றில் 85 திட்டங்கள் இதுவரை முடிக்கப்பட்டுவிட்டன. இதுதொடா்பாக கடந்த டிச.22, 30 ஆகிய தேதிகளில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வுக் கூட்டம் நடத்தினாா்.

இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், ரூ.3,291 கோடியில் செயல்பாட்டில் உள்ள 27 முத்திரைத் திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், 2030-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் தமிழ்நாடு விளையாட்டு வீரா்கள் பதக்கம் வெல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கவும், கடம்பூரில் பல்லுயிா் பாதுகாப்பு பூங்கா, மரக்காணத்தில் சா்வதேச பறவை மையம், கடலூா் மாவட்டம், பிச்சாவரத்தில் சதுப்புநில பாதுகாப்பு மையம், தஞ்சாவூரில் சா்வதேச கடல் பசு பாதுகாப்பு மையம், சென்னையில் கடல் ஆமை பாதுகாப்பு மையம் அமைக்கும் பணிகளுக்கு அடுத்த மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்படவும் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்தக் கூட்டத்தில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாகு, பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலா் மங்கத் ராம் சா்மா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சேலம் உழவா் சந்தைகளில் ரூ. 1.53 கோடிக்கு காய்கறிகள் விற்பனை

மியான்மரில் தேர்தல் நாடகம்!

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து...

தருமபுரியில் பொங்கல் பொருள்கள் விற்பனை மும்முரம்

மனிதநேய பண்பாட்டு பொங்கல்!

SCROLL FOR NEXT