பொங்கலுக்கு தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போல வட மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலையில் "எருது விடும் விழா" பிரபலம்.
இந்த நிலையில் மாட்டுப் பொங்கலையொட்டி லத்தேரி அடுத்த பனமடங்கி கிராமத்தில் எருது விடும் விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
இதில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று ஓடி வருகின்றன. முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் என பல பரிசுகளும், பரிசு பொருள்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும் எருது விடும் விழாவை ரசித்து வருகின்றனர். குறைந்த விநாடியில் பந்தைய தூரத்தை கடக்கும் காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
அரசு விதித்துள்ள 13 விதிமுறைகளைப் பின்பற்றி விழா நடைபெற்று வருகிறது. கால்நடை மற்றும் மனிதர்களுக்கான மருத்துவக்குழுவானர் முகாமிட்டுள்ளனர். காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.