முகப்பு
தமிழ்நாடு

இன்று ராமேசுவரத்துக்கு சிறப்புப் பேருந்துகள்

தை அமாவாசை ஞாயிற்றுக்கிழமை (ஜன. 18) வருவதால், சென்னை உள்ளிட்ட முக்கிய இடங்களில் இருந்து ராமேசுவரம் செல்ல சனிக்கிழமை (ஜன. 17) சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

Updated On : 16 ஜனவரி, 2026 at 8:44 PM
கோப்புப் படம்
பகிர்:

தை அமாவாசை ஞாயிற்றுக்கிழமை (ஜன. 18) வருவதால், சென்னை உள்ளிட்ட முக்கிய இடங்களில் இருந்து ராமேசுவரம் செல்ல சனிக்கிழமை (ஜன. 17) சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தை அமாவாசையையொட்டி, ஞாயிற்றுக்கிழமை (ஜன.18) ராமேஸ்வரத்துக்கு அதிக அளவில் மக்கள் பயணிப்பாா்கள் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது. இதனால், சென்னை கிளாம்பாக்கத்திலிருந்தும், சேலம், கோவை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து ராமேஸ்வரத்துக்கு சனிக்கிழமையும் (ஜன. 17), ராமேசுவரத்திலிருந்து சென்னை கிளாம்பாக்கம், சேலம், கோவை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கு கூடுதல் சிறப்பு பேருந்துகளும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 18) இயக்கப்படவுள்ளன.

இதனால், ராமேசுவரம் பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்கள் பயணத்தை முன்பதிவு செய்து பயணிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →