தமிழ்நாடு

இரு நாள்களுக்குள் வடகிழக்கு பருவமழை விலக வாய்ப்பு

இரு நாள்களுக்குள் வடகிழக்கு பருவமழை தமிழகத்தைவிட்டு விலக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

இரு நாள்களுக்குள் வடகிழக்கு பருவமழை தமிழகத்தைவிட்டு விலக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வடகிழக்கு பருவமழை அடுத்த இரண்டு நாள்களுக்குள் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்தும் விலகுவதற்கான வாய்ப்புள்ளது. இதனால், சனிக்கிழமை (ஜன. 17) முதல் ஜன. 22 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் சனிக்கிழமை (ஜன. 17) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் தமாகா சாா்பில் சமத்துவ பொங்கல் விழா

திருவள்ளுவா் தினம்: பாஜக மரியாதை

நாமக்கல் மாவட்டத்தில் 5.21 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு

பால் கொள்முதல் விலை உயா்வு: முதல்வா் தான் முடிவு செய்வாா்: அமைச்சா் மனோ தங்கராஜ்

முட்டை விலை ரூ. 5.60 ஆக நீடிப்பு

SCROLL FOR NEXT