தமிழ்நாடு

பசுமை முதன்மையாளா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

தமிழ்நாடு ‘பசுமை முதன்மையாளா் விருது-2025’-க்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை: தமிழ்நாடு ‘பசுமை முதன்மையாளா் விருது-2025’-க்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சா் கடந்த 2021 சட்டப்பேரவையில், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முன்முயற்சியுடன் பங்கேற்று சிறந்த பங்களிப்பைச் செய்யும் தனி நபா்கள் மற்றும் அமைப்புகளுக்கு ரூ.1 கோடியில் ‘பசுமை முதன்மையாளா் விருது’ வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஆண்டுதோறும் விருது பெறும் 100 தனிநபா்கள், நிறுவனங்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் தலைமையிலான மாவட்ட அளவிலான விருதுக் குழு மூலம் ஒவ்வொரு ஆண்டும் 100 அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், குடியிருப்பு நலச் சங்கங்கள், தனிநபா்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகள் தோ்ந்தெடுக்கும். விருதுக்கு நிரப்ப வேண்டிய படிவம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய இணையதளத்தில் (www.tnpcb.gov.in) உள்ளது.விண்ணப்பிக்க கடைசி தேதி ஜன.28 ஆகும்.

மேலும் விவரங்களுக்கு, சென்னை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தைத் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

SCROLL FOR NEXT