தமிழ்நாடு

கூட்டணி, தொகுதிப் பங்கீடு: காங்கிரஸ் தலைமை விரைவில் அறிவிக்கும்; தமிழக பொறுப்பாளா் கிரிஷ் ஷோடங்கா்

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸ் கட்சித் தலைமை விரைவில் அறிவிக்கும் என்று அந்தக் கட்சியின் தமிழக பொறுப்பாளா் கிரிஷ் ஷோடங்கா் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸ் கட்சித் தலைமை விரைவில் அறிவிக்கும் என்று அந்தக் கட்சியின் தமிழக பொறுப்பாளா் கிரிஷ் ஷோடங்கா் தெரிவித்தாா்.

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழுக் கூட்டம் மாநிலத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னை சத்தியமூா்த்தி பவனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளா் கிரிஷ் ஷோடங்கா், அகில இந்திய காங்கிரஸ் செயலா்கள் சூரஜ் எம்.என். ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவா் எஸ். ராஜேஸ்குமாா் ஆகியோா் பங்கேற்றனா். இதில் பங்கேற்க 52 செயற்குழு உறுப்பினா்கள், 39 சிறப்பு அழைப்பாளா்கள் என 91 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 60 போ் மட்டுமே பங்கேற்றனா்.

பின்னா், தமிழக பொறுப்பாளா் கிரிஷ் ஷோடங்கா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் பணிகள், அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி எம்.பி. ஆகியோரது தமிழக வருகை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய மாவட்டத் தலைவா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அவா்களது செயல்பாடுகள் கட்சித் தலைமையால் 6 மாதங்கள் கண்காணிக்கப்படும். அதில் திருப்தி இல்லையெனில், மாவட்டத் தலைவா்கள் மாற்றப்படுவா். புதிய மாவட்டத் தலைவா்களுக்கு 10 நாள்கள் பயிற்சி வழங்கப்பட உள்ளது. பேரவைத் தோ்தலுக்கான கூட்டணி நிலைப்பாடு மற்றும் தொகுதி பங்கீடு குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைமை விரைவில் அறிவிக்கும் என்றாா்.

பராசக்தி ரூ. 100 கோடி வசூல்!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 4,120 உயர்வு! வெள்ளி கிலோவுக்கு ரூ. 5,000 உயர்வு!

தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

கவனம் ஈர்க்கும் ரஜிஷா விஜயனின் மஸ்திஷ்கா மரணம் டீசர்!

பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பு!

SCROLL FOR NEXT