அரசு ஊழியர்களின் போராட்டங்களை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டம் குறித்து அதிமுக எம்எல்ஏ தங்கமணி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், 'எம்எல்ஏ தங்கமணி அக்கறையோடு அரசு ஊழியர்களின் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்த அக்கறை உங்கள் ஆட்சியில் ஏன் இல்லை? ஆனால் நாங்கள் போராட்டம் நடத்தும் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கிட்டத்தட்ட 95% கோரிக்கைகளை நிறைவேற்றியிருக்கிறோம். அரசு ஊழியர்கள் போராடுவது அவர்கள் உரிமை. ஆனால் அதிமுக ஆட்சியைப்போல நாங்கள் அவர்களை இரவோடு இரவாக கைது செய்யவில்லை. சிறையில் அடைக்கவில்லை.
அரசு ஊழியர்களின் போராட்டங்களை இந்த அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்களைக் கொசைப்படுத்தி பேசியது எல்லாம் மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறன். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அமைச்சர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். 23 ஆண்டு கால ஓய்வூதிய பிரச்னையை நாங்கள் முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறோம். அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருப்பது எதிர்கட்சியினருக்கு பிடிக்கவில்லை. அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். மீண்டும் திமுக அரசுதான் அமையும்" என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.