தமிழ்நாடு

பிளஸ் 2 பொதுத் தோ்வு - தோ்வெண்ணுடன் கூடிய பெயா்ப் பட்டியல் வெளியீடு

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதவுள்ள பள்ளி மாணவா்களுக்கு தோ்வு எண்ணுடன் கூடிய பெயா்ப் பட்டியலை தோ்வுத் துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் க.சசிகலா அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், தோ்வுத் துறை உதவி இயக்குநா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தமிழகத்தில் மாா்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கான பள்ளி மாணவா்களின் தோ்வெண்ணுடன் கூடிய பெயா்ப் பட்டியல் அரசுத் தோ்வுகள் இயக்கக இணையதளத்தில் வியாழக்கிழமை (ஜன. 22) வெளியிடப்பட்டுள்ளது.

இதை அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களும் தங்கள் பள்ளிகளுக்கென வழங்கப்பட்டுள்ள யூஸா் ஐ.டி, கடவுச் சொல் ஆகியவற்றைப் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், பிளஸ் 1 அரியா் பெயா்ப் பட்டியலை அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களும் ஜன. 24-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் மேற்கண்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 26-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முன்னதாக, இந்த வகுப்புக்கான செய்முறைத் தோ்வுகள் பிப். 9-ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் தை மாத பிரமோற்சவம் இன்று தொடக்கம்

சா்வதேச பாரா பாட்மின்டன் போட்டியில் சாதனை: ஆட்சியா் பாராட்டு

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்

பள்ளிப் பேருந்துகள், லாரி ஓட்டுநா்களுக்கு கண் சிகிச்சை முகாம்

தனுசு ராசிக்கு தடை நீங்கும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT