மதுராந்தகம் பொதுக்கூட்டத்தால் சட்டப்பேரவையில் பெரிய பதற்றம் ஏற்பட்டுள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், சென்னை சட்டப்பேரவையில் இன்று பெரிய பதற்றம். இங்கு கூடியிருக்கும் கூட்டம் அவர்களின் ஆட்டத்தை முடிப்பதற்கான கூட்டம். வானமே வாழ்த்திக்கொண்டிருக்கிறது. சூரியன் மறைந்து போய் உள்ளது.
மோடி சென்னை வருகையால் சூரியன் மறைந்து போனது. ஆட்சி மாற்றம் நூற்று நூறு உறுதி. அதற்கான வேலையை பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி செய்துகொண்டிருக்கிறார்கள். நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்து வெற்றி காண வேண்டும். தேசிய ஜனநாயக ஆட்சி மலர வேண்டும்.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற முடியவில்லை. சனாதன தர்மத்தை அழிப்போம் என்று சொல்கிறார்கள். திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். திமுக அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை. மக்கள் மீது அக்கறைகொண்ட தலைவர் பிரதமர் மோடி. மருத்துவ கல்லூரிகள், வந்தே பாரத் ரயில்கள் தமிழகத்திற்கு தந்திருக்கிறார்கள்.
11 ஆண்டுகாலத்தில் 14 லட்சம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. நரேந்திர மோடியின் புகழ் ஓங்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டடார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.